உலகம்

கொரோனா வைரஸ் : ரோபோக்கள் மூலம் தாதியர்களை பாதுகாக்கும் சீனா

(UTV|சீனா) – சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைக் கொண்டுசெல்வதற்கு மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 900இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 நாடுகளுக்கும் இது பரவியுள்ளது.

வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் இனிவரும் காலத்தில் அதிகமானோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சீனாவில் பல மருத்துவமனைகள் ரோபோக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.

மருத்துவ தாதியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை வழங்குவதற்குப் பதிலாக ரோபோக்கள் இதனைச் செய்கின்றன. இதன் மூலம், நோயுற்றவர்களுடன் அதிகமான நேரத்தை தாதியர்கள் செலவுசெய்ய வேண்டியதில்லை.

அவர்களை கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தில் இருந்து பாதுகாக்கலாம் என்ற நோக்கில் பல மருத்துவமனைகளில் ரோபோக்களைப் பயன்படுத்தும் நடைமுறை வந்துள்ளது.

 

Related posts

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

editor

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்