கிசு கிசு

கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ள கிரிக்கெட் வீரர்கள்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டதால், தென்ஆப்பிரிக்கா அணி சொந்த நாடு திரும்பியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

எனினும், முதலாவது போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டதுடன், ஏனைய இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு அவர்கள் இன்று காலை தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தனர். பெரும்பாலான நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் அவர்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்த இருக்கிறார்கள். இதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் சபி உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

நாடு இருளில் மூழ்கக் காரணம் இதுதானாம்

தாமரை கோபுரத்தில் சாத்தானை ஊக்குவிக்கும் நரக நெருப்பு இசை விழாவுக்கு எதிர்ப்பு

‘பென்டோரா பேப்பர்ஸ்’ பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ