உள்நாடு

கொரோனா வைரஸ் – குணமடைந்து வரும் சீன பெண்ணின் உடல் நிலை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாட்டில் அடையாளங் காணப்பட்ட சீன பெண்ணின் உடல் நிலை தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் அவரது உடல் ஆரோக்கியம் வழமைக்கு திரும்பும் என தற்போது முன்னெடுக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சீன பெண் கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

நிந்தவூர் அட்டப்பளம் சம்பவம் – ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதவான் உத்தரவு

editor

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது