உலகம்

கொரோனா : பலி எண்ணிக்கை 803

(UTV|சீனா) – சீனாவில் பரவி வரும் உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் புதிதாக 81 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் சீனாவில் இதுவரையில் 36,693 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஹூபேய் மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இரண்டாயிரத்து 147 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சீனாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

இங்கிலாந்து நாடாளுமன்ற முதல் உரையில் தாயை நினைத்து மன்னர் சார்லஸ் உருக்கம்

இந்தியா, பங்களாதேஷை தாக்கிய அம்பன் சூறாவளி -15 பேர் உயிரிழப்பு