உள்நாடு

கொரோனா நோயாளிகளில் 463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் மொத்த எண்ணிக்கையானது 2,454 ஆக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவே நாளொன்றுக்கான அதிகூடிய தொற்றாளர் எண்ணிக்கை என்றும் சுகாதார வைத்தியப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 283 தொற்றாளர்களும் சமூகத்தில் இருந்து 03 தொற்றாளர்களும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 01 தொற்றாளரும் நாடு திரும்பியோரில் 13 தொற்றாளர்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2,454ஆக அதிகரித்துள்ளது. இதில் 463 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் 1,980 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!