கேளிக்கை

கொரோனா நிவாரண நிதிக்காக நிர்வாணப் புகைப்படம் ஏலத்தில்

(UTV | இந்தியா) – கொரோனா நிவாரண நிதிக்காக 1995 இல் எடுக்கப்பட்ட தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடுகிறார் பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டன்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா்.

51 வயது நடிகை ஜெனிபர் அனிஸ்டன், பிரெண்ட்ஸ் (1994, 2004) தொடரில் நடித்ததன் மூலம் புகழை அடைந்தவர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகி இவருக்கு மேலும் புகழைச் சேர்த்தன.

உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் பலமுறை இவர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் அனிஸ்டன்.

1995 இல், அனிஸ்டனுக்கு 26 வயது இருந்தபோது அவரை வைத்து ஒரு நிர்வாணப் புகைப்படத்தை எடுத்தார் புகைப்படக் கலைஞர் மார்க் செலிகர். அந்தப் புகைப்படத்துடன் தான் எடுத்த 25 புகைப்படங்களை கொரோனா நிவாரண நிதிக்காக ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார் செலிகர்.

இன்ஸ்டகிராம் தளத்தில் இதுகுறித்த தகவலை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார் அனிஸ்டன்.
ஏலத்தில் கிடைக்கும் தொகை, என்.ஏ.எஃப். கிளினிக்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். கொரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும் இலவசப் பரிசோதனைக்கும் அந்த அறக்கட்டளை இந்த நிதியைச் செலவிடும் என்று அனிஸ்டன் கூறியுள்ளார்.

Related posts

போதைப்பொருள் விவகாரம் பிரபல நடிகை கைது

சூர்யா 37′ டைட்டில் ரிலீஸ் திகதி மற்றும் நேரம் அறிவிப்பு

விண்ணைத்தாண்டி வருவாயா – 2 கௌதம் மேனனின் திட்டம்