உலகம்

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா கட்டுப்பாடு

(UTV | ரஷ்யா) – ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேலே, 60 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு மட்டும்தான் இப்போதைக்கு செலுத்த வேண்டும் என்று, அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக கடந்த 11ம் திகதி அறிவித்தது, இதற்கு ஸ்பூட்னிக் 5 என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த மருந்தை பயன்படுத்த பல நாடுகளும் தயங்கி வருகின்றன. இதற்கு காரணம், 3வது மனித டிரையல்களை முடிக்காமல், 2வது டிரையலை முடித்து மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதால் ஆகும்.

Related posts

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

பேருந்து விபத்தில் 27 பேர் பலி – 20 பேர் காயம்

இத்தாலியில் நாடுதழுவிய முடக்க செயற்பாடுகள் அமுல்