உள்நாடுசூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களில் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

43 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய குழுவைக் கண்டுபிடிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு விக்கியிடம் சுதந்திர கட்சி கோரிக்கை

அனைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளம் அதிகரிப்பு

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு…