உள்நாடு

கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

(UTV | தலவாக்கலை ) –  கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், குழந்தை லிதுல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டியானது தினமும் ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், தலவாக்கலை லிதுல நகரசபை ஊழியர்கள் நகரை சுத்தப்படுத்த வந்த போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டு பார்த்த போது குழந்தை ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைவிடப்பட்ட குழந்தை பிறந்து சுமார் 12-14 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, முச்சக்கரவண்டியில் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் சிசிரிவி காணொளிகளை வைத்து தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லிதுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாரம்மல துப்பாக்கிச்சூடு – நியமிக்கப்பட்ட விசேட குழு

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 139 பேருக்கு கொரோனா