அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சி.ஐ.டியில்

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.

Related posts

உடரட்ட மெனிக்கே தடம்புரண்டது

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது