சூடான செய்திகள் 1

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் குற்றத்தடுப்பு பிரிவிடம்

(UTV|COLOMBO) பதுரலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று பதுரலிய, திக்ஹேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்ட சம்பவத்தில் பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.

மேற்படி சந்தேகநபரிடம் பதுரலிய பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு குற்றப் பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி ஆரம்பம்

இடியுடன் கூடிய மழை

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று