விளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயர் பரிந்துரை

(UTV|INDIA)-இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை மத்திய அரசுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதுக்கு சுனில் கவாஸ்கர் பெயரை பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலியின் பெயரை கடந்த ஆண்டும் கேல் ரத்னா விருதுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்திருந்தது.

முன்னதாக சிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஷிகர் தவான், ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்

தடகள போட்டியில் உலக சாதனை படைத்த உகண்டா வீரர்

இலங்கை சுற்றுப்பயணத்தில் பயமேன்