சூடான செய்திகள் 1

கெஹெலிய ரம்புக்வெலவின் அடிப்படை ஆட்சேபனை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் ஊடக அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர் அமைச்சராக இருந்த போது, கைப்பேசி கட்டணமாக 2 லட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபாவை செலுத்துவதற்கு அரசாங்க அச்சக நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 28ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் இடைக்கால தடை நீடிப்பு

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்