உள்நாடு

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு : மே 07 ஆம் திகதி வரை ஒத்திப்பு

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க அனுப்பதிப்பதா?  இல்லையா? என்ற உத்தரவை மே 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவு இன்று (30) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அது குறித்த உத்தரவு மே 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிபதி டி.என். சமரகோன் அறிவித்தார்.

Related posts

மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு