விளையாட்டு

கெய்ல் இனை சமன் செய்த டிவில்லியர்ஸ்

(UTV | துபாய்) – பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் நேற்றைய தினம் மோதிய நிலையில் சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றிருந்தது

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியின் டிவிலியர்ஸ் மிக சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதுமட்டுமின்றி அவர் நேற்றைய ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையையும் செய்துள்ளார்.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கிரிஸ் கெயில் அதிக முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ள நிலையில் அந்த சாதனையை நேற்று ஆட்டநாயகன் விருதை பெற்றதன் மூலம் டிவில்லியர்ஸ் சமன் செய்துள்ளார். கிறிஸ் கெயில் 125 போட்டிகளில் விளையாடி 21 முறை ஆட்டநாயகன் பெற்றுள்ள நிலையில் டிவில்லியர்ஸ் அவர்களும் நேற்று 21வது ஆடநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீச்சல் போட்டிகளிலிருந்தும் இலங்கை வெளியேறியது

நவோமி ஒசாகாவுக்கு அபராதம்

இலங்கை கிரிக்கெட் சபை கோப் குழு முன்னிலையில்