விளையாட்டு

கெய்லுக்கு 1½ கோடி இழப்பீடு?

(UTV|WEST INDIES)-2015 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.

இதனை அடுத்து கெய்ல், அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். ஆனால் இழப்பீடு தொகை விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் 1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேன்முறையீடு செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன்

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா

T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு