உள்நாடு

கெப் வண்டி மோதி பஸ் விபத்து- ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி !

(UTV | கொழும்பு) –  கெப் வண்டி மோதி பஸ் விபத்து- ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி !

தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்ட போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் வண்டி ஒன்று மோதி விபத்துக்குளாகியுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்று அனுராதபுரம் பாதெனிய வீதியின் ஆரியகம சந்தியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த தருணத்தில் பஸ்ஸின் பின்பகுதியில் பயணிகள் தங்களது பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வந்த கேப், பேருந்தின் பின்னால் சென்ற மூன்று பயணிகள் மீது மோதியுள்ளதாகவும்,
சம்பவத்தில் படுகாயமடைந்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய இருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீள ஆரம்பிக்கப்படும் கொக்குதொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள்!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு

நாடு பூராகவும் மழையுடனான வானிலை