வகைப்படுத்தப்படாத

கென்யாவில் விமான விபத்து – 5 பேர் உயிரிழப்பு

(UTV|KENYA) கென்யா நாட்டின் வடமேற்கு பகுதியில் நடந்த விமான விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் நேற்று காலை மசாய் ஒமாரா பகுதியில் இருந்து லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுக்கொண்டிருந்த போது, கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டவர் என தெரியவந்துள்ளது.

விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகிறது.

மேலும் இந்த விமான விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

Japanese Minister of Defence visits Lankan Naval ship ‘Gajabahu’

How to get UAE tourist visa fee waiver for kids

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்