உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

காலி – கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவியகஹவெல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் கரந்தெனிய, திவியகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி.

editor