வகைப்படுத்தப்படாத

கூட்டு எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு – அரசாங்கம் நிராகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் சரியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபலஸ்ஸ பலமிபோறுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீரை வழங்குவதற்காக நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர்; சஜித் பிரேமதாச  உரையாற்றினார். இதன் போது இது குறித்து கருத்துத் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அனைத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சமகால நல்லாட்சி அரசாங்கம் எந்தவித நிதி மோசடியையும் மேற்கொள்ளவில்லை. பொது மக்களுக்காக விநியோகிக்கப்படும் நிவாரணங்கள் மூலம் முறையற்ற அரசியல் நன்மையை பெற்றுக் கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் செயற்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

நிவாரணம் வழங்கப்பட வேண்டிய  தரப்பினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக அரசாங்கம் நிதியொதுக்கீடு செய்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், வெளிநாட்டு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

‘அங்கொட லொக்கா’ உள்ளிட்ட இருவரை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி

Over 600,000 people affected by drought – DMC

சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்