உலகம்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

(UTV | கொழும்பு) –

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு வர முடியாமல் வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு இன்று காலை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் 53 வீட்டுப் பணிப்பெண்களும் ஒரு வீட்டுப் பணியாளரும் அடங்குவர். இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலோர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் பொலன்னறுவை, மொனராகலை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வருகை தந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு தமது ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க IMF ஒப்புதல்

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்கவுக்கு எதிரான பிணை தளர்வு!

உலக சுகாதார நிறுவனம் நியாயமற்று நடந்து கொள்கிறது – ட்ரம்ப்