சூடான செய்திகள் 1

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

(UTV|COLOMBO) குவைட்டில் பணிக்கு சென்று அங்கு பல துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 26 இலங்கைப் பெண்கள் இன்று(17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பணிப்பெண்கள் இன்று(17) காலை 6.30 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ. எல். 230 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைப் பணிப்பெண்கள் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் குவைட்டில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு சென்று பின்னர் சுரக்ஷா முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களே, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

மகிந்தவின் இல்லத்திற்கு சென்ற சி.ஐ.டி

காலவரையறையின்றி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டது

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு