சூடான செய்திகள் 1

குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் தோற்கடிக்கப்பட்ட பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகிய அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீடை இன்று மீண்டும் நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்றில்  முன்வைக்கவுள்ளதாக சபைத்தலைவர் , அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 17ம் நாள் இன்றாகும்.

மேலும் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் , பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு

இன்று(07) முதல் ஆராதனைகளுக்காக திறக்கப்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்