உள்நாடு

குளவிக் கொட்டுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளர்.

இன்று (25) முற்பகல் 10 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கலைந்து கொழுந்து பரித்துக்கொண்டிருந்தவர்கள் மீது கொட்டியத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண், மூன்று பிள்ளைகளின் தாயான ஹட்டன் தரவலை தோட்டத்தைச் சேர்ந்த  52 வயதான பெண்ணொருவராவார்.

மேலும் இச்சம்பவத்தில் 5 பெண்களும் இரு ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்றும் மின்வெட்டு

என்னை சிறையில் அடைக்க கடும் முயற்சி- சுதந்திர கட்சி மலரும்

கின்னஸ் சாதனை படைத்தனர் இலங்கை மாணவர்கள்