கேளிக்கை

‘குல் மகாய்’ ஜனவரியில்

(UTV|COLOMBO) – மலாலா வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, எடுக்கப்பட்டுள்ள ‘குல் மகாய்’ என்ற இந்திப்படம் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் சுவாட் பள்ளத்தாக்கை சேர்ந்த இளம்பெண் மலாலா யூசப்சாய். சுவாட் பள்ளத்தாக்கை தலீபான்கள் கைப்பற்றியபோது, அவர்களது அடக்குமுறைக்கு எதிராக மலாலா குரல் கொடுத்தார்.

குறிப்பாக, பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடினார். அதனால் தலீபான்களின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிர் பிழைத்தார். அவரது துணிச்சலுக்காக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மலாலா வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, ‘குல் மகாய்’ என்ற இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங்க்லா தயாரிக்க, அம்ஜத்கான் இயக்கி உள்ளார். ரீம் ஷேக், மலாலாவாக நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 31ம் திகதி வெளியிடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

Related posts

சர்கார் படத்தின் எச்.டி இன்றே வெளியாகும்?

நடிகர் நகுலுக்கு வாரிசு

அடி பாதாளத்திற்கு சென்ற ஹன்சிகாவின் மஹா பட வசூல்