சூடான செய்திகள் 1

குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகரின் இடமாற்றம் இரத்து

(UTV|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் நெவில் சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று கூடிய காவற்துறை ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பிரதான காவற்துறை பரிசோதகர் நெவில் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு ஆராயப்பட்ட போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம் [UPDATE]

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

கொள்ளுப்பிட்டி – கொம்பனிதெரு பகுதிகளில் கடும் வாகன நெரிசல்