யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை வேளை வீசிய சிறியளவு சூறாவளி காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.