வகைப்படுத்தப்படாத

குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – சகல உள்ளுராட்சி நிறுவனங்களினதும் கழிவகற்றல் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றக்கோரும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல்  நேற்று  நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

  1. எந்தவொரு உள்ளுராட்சி நிறுவனத்தாலும் முன்னெடுக்கப்படுகின்ற அல்லது பேணப்படுகின்ற கழிவகற்றல் ,சேகரித்தல், வாகனங்களில் கொண்டு செல்லல், தற்காலிகமாக சேர்த்து வைத்தல், பதப்படுத்தல் பிரித்தல், அப்புறப்படுத்தல் செயற்பாடுகளும் – வீதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்குள் உள்ளடங்கும்.
  2. ஒரு நபருக்குஇ அல்லது உடைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதோ, அவதூறு ஏற்படுத்துவதோ, கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதோ, தாமதப்படுத்துவதோ குற்றச்செயலாகக் கருதப்படும். கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை தூண்டுவதும், அதற்குரிய சேவைகளை நடத்துவதற்கு தடை போடுவதும், அத்தகைய தொழிலில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பதும் கூட சட்டவிரோதமானதாக பிரகடனப்படுத்தப்படும்.
  3. இந்த சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியாக இனங்காணப்படும் எவரையும் பிடிவிறாந்து இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ளது. குற்றவாளியாக இனங்காணப்படும் நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும்.

Related posts

Rishad says “Muslim Ministers in no hurry to return”

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்

பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானத்தில் பயணித்த 8 பேர் மீட்கப்பட்டனர்