சூடான செய்திகள் 1

குப்பை கண்டேனர்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல்

 

(UTV|COLOMBO)-  குப்பைகள் அடங்கிய கண்டேனர்களை திருப்பி அனுப்புமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை இலங்கை சுங்க திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த கண்டேனர்கள் பிரித்தானியாவில் இருந்து இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார் 100 கண்டேனர்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதில் பயன்படுத்த முடியாத மெட்ரஸ், காபட் போன்றவை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கண்டேனர்களில் உள்ள குப்பைகள் சுற்றாடலில் தாக்கம் செலுத்தும் என்பதால் திருப்பி அனுப்புமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Related posts

நிழல் உலக தாதா’வின் விசாரணைகளில் துரிதம்

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்