உள்நாடு

குணபால ரத்னசேகரவின் இராஜினாமாவுக்கான காரணம்

(UTV | கொழும்பு) – கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த இராஜாங்க அமைச்சர், அமைச்சுப் பதவியில் செயற்படுவதற்கு ஒரு நாடு ஸ்திரத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

“இந்த அமைச்சுக்களில் பணியாற்றுவதற்கு போதுமான சூழல் இல்லை என்பதை நான் உண்மையாக ஒப்புக்கொள்கிறேன். எனவே எனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் நேற்று மாலை தனிப்பட்ட முறையில் கையளித்தேன். அப்போது அதனை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார். ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து கடிதத்தை கையளித்தேன். இந்த அமைச்சில் செயற்படக் கூடிய சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை நாட்டில் இல்லை. ஒரு நாட்டில் தொடர்ந்து அமைச்சுப் பணியில் ஈடுபடும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதே நிலைத்தன்மையும் இருக்க வேண்டும். இந்த ஸ்திரத்தன்மையை நாம் முதலில் உருவாக்க வேண்டும்..”

Related posts

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் 2 இலட்சம் தேங்காய்கள் விநியோகம்

editor

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை – சுஜித் சஞ்சய் பெரேரா

editor

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்