உலகம்

குச்சி ஐஸில் குட்டி பாம்பு – ஆசையாக வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டியில் ஐஸ் விற்பனை செய்துள்ளார். இவரிடமிருந்து ஒருவர் குச்சி ஐஸ் வாங்கியுள்ளார்.

அவர் அந்த ஐஸின் கவரை பிரித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது அதில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உற்று பார்த்த போது தான் தெரிந்தது அது பாம்பு என்று தெரிந்தது.

அதாவது ஒரு சிறிய பாம்பு உறைந்து போய் அதிலிருந்தது. இதை பார்த்து அவர் நடுங்கிப் போன நிலையில் அதிர்ஷ்டவசமாக வாயில் வைத்து சுவைக்கவில்லை என்று சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.

மேலும் இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட தற்போது அது மிகவும் வைரலாகி வருவதோடு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

ஹஜ் யாத்திரையில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை

editor

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ‘ஜோ பைடன்’

உலகளவில் 90 இலட்சம் பேருக்கு கொரோனா