உள்நாடு

கிழக்கு முனைய விவகாரம் : விமல் தலைமையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படுமாயின் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்சவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று(30) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்திப்பில் பங்கேற்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புடன் இணைந்துள்ள 5 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ், அசங்க நவரட்ண, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வீரசிங்க ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறைச்சாலை கைதிகள் 23 பேருக்கு கொரோனா

யக்கலமுல்ல பகுதியில் இருவர் கைது

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

editor