உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல – அமைச்சர் ஹாபீஸ் நஸீர்

(UTV | கொழும்பு) –

“கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?, இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது – என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத்.

VIDEO: https://youtu.be/EK25YEn8g7Q https://youtu.be/EK25YEn8g7Q

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம். ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனவும், அது நிறுத்தப்படல் வேண்டும் எனவும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அங்கு பேசும்போதே அமைச்சர் காரசாரமாகக் கிழக்கு மாகாண ஆளுநரை விமர்சித்தார்.

தான் முதலமைச்சராக இருந்ததாகவும், ஆனால் இப்படி செயற்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி

மேலும் 229 பேர் அடையாளம்