வகைப்படுத்தப்படாத

கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ரோஹித போகல்லாகம தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்ற அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கிழக்கு மாகாண ஆளுநராக தம்மை தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதியினுடைய நோக்கங்களான அர்த்தமுள்ள நல்லிணக்கம், வளமான நாட்டை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப அனைவருடைய ஒத்துழைப்பபையும் வழங்குமாறு இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம கேட்டுக்கொண்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தாம் இதற்கு முன்னர் ஜனாதிபதிகளாக கடமையாற்றிய பலருடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தின் நிலவரம் பற்றி தான் தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் கல்வித்துறையில் பின் தங்கிய நிலை, வேலையின்மை வீதம் அதிகம் போன்ற பல காரணங்கள் மாகாணத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் , சமத்துவமான இணக்கமான நட்புணர்வு ரீதியிலான அடிப்படையில் செயற்பட்டு கிழக்கு மாகாணத்தையும் நாட்டையும் அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்வது இன்றியமையாத காலத்தின் தேவையாக காணப்படுவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி. பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கிழக்கு மாகாண சுகாதார, கல்வி ,வீதி, அபிவிருத்தி, விவசாய துறைசார் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

இருவேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இருவர் மாயம்..

ගෝඨාභය යළි දිවයිනට

ගම්පහ දිස්ත්‍රික්කයේ ප්‍රදේශ රැසකට ජලය කප්පාදුවක්