உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநரினால் காணி அனுமதிப்பத்திரங்கள் பொது மக்களிடம் கையளிப்பு!

(UTV | கொழும்பு) –

 

காணிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு மூதூரில் இடம் பெற்றது. மூதூர் பிரதேச செயலகத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று உத்தியோ பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான், செக் குடியரசின் உயர்ஸ்தானிகர், மேலதிக மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர், மூதூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இன்றைய நிகழ்வில் ஏற்கவே காணி கச்சேரி ஊடாக 200 காணி உரிமையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கான கடிதம் கையளிக்கப்பட்டது.

     

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய!

சதொச விற்பனை நிலையங்களை அதிகரிக்க தீர்மானம் – வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

யாழில் 60போலி சாரதி அனுமதிப்பத்திரம் : சிக்கிக்கொள்ளும் நபர்!