வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சியில் தென்னிலங்கை இளைஞர் குழுவினர்மீது வாளுடன் தாக்குதல் முயற்சி !

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி நகர பகுதியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.தென்பகுதியிலிருந்து உந்துருளிகளில் சுற்றுலா வந்த இளைஞர்குழுவினரின் உந்துருளியின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது .

கிளிநொச்சி நகர பகுதியில் வீழ்ந்து காணப்படும் நீர்த்தாங்கியை பார்வையிடுவதற்காக வருகைதந்த குழுவினர் உந்துருளிகளை வீதியோரமாக நிறுத்திவிட்டு புகைப்படம்  எடுத்துக்கொண்டிருந்த  சமயம் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் இருவர்   தாக்குதலை மேற்கொகொள்ள  எத்தனித்த  வேளை  இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர்    வருகைதந்த  இனந்தெரியாத  நபர்கள் அவர்களது  மோட்டர் சைக்கிள்  களை அடித்து சேதமாகி  விட்டு தப்பிச்சென்றுள்ளனர்

குறித்த சம்பவம் காரணமாக சற்று முன்  கிளிநொச்சி நகர் பகுதியில் பரபரப்பான சூழல்  நிலவியது   கிளிநொச்சி பொலீசாரின் முதலாம் கட்ட  விசாரணைகளில்  தாக்குதலை மேற்கொனடவர்  எனும் சந்தேகத்தில் ஒருவர் இனம்காணப்பட்டுள்ளார் இருப்பினும்  யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை   அத்துடன் குறித்த தாக்குதல் மதுபோதையில் இருந்தவர்களினாலையே  மேற்கொள்ளப்பட்டு உள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர்  அத்துடன் மேலதிக விசாரணைகளும்    இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தகது

எஸ்.என்.நிபோஜன்

Related posts

மர்ம நபர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

பூட்டான் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங்

ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை