உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த “கயஸ்” வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து விசுவமடு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் “கயஸ்” வாகனத்தில் பயணித்த மற்றொருவரும் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் நல்ல அரசியலுக்கான தேவை உள்ளது – அனுரகுமார

editor

ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்