உள்நாடு

கிளிநொச்சி, தர்மபுரம் OIC க்கு 50000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்டவர் கைது

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (30) கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

லண்டனில் இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்கவிற்கு பொலிஸ் நிலைய அலுவலகத்திற்குள் வைத்து 50000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.

இதன்போதே குறித்த சந்தேகநபர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (30) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

-சப்தன்

Related posts

ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது