விளையாட்டு

கிறிஸ் கெய்ல் இனது அதிரடி

(UTV | மேற்கிந்திய தீவு) – இன்னும் நிறைய விளையாட இலக்கு உள்ளதாக இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ (Universe Boss) என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் 40 வயதான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில்,

‘‘இந்த கிறிஸ் கெய்லின் அதிரடி ஜாலத்தை இன்னும் உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.

நானும் இந்த விளையாட்டு மீது தனியாத ஆர்வத்துடன்தான் இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியுமோ? அவ்வளவு நாட்கள் விளையாட விரும்புகிறேன். எனக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் லீக் போட்டியில் விளையாட இன்னும் நிறைய அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

உடல் ரீதியாக இன்னும் நன்றாகத்தான் இருக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவீர்கள் என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தமட்டில் 45 நல்ல நம்பர். 45 வயது வரை விளையாடுவது எனது இலக்காகும்.

இந்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

உயரம் பாய்தலில் தங்கபதக்கத்தை வென்றார் காவியா

இலங்கைக்கு வெற்றி இலக்கு 321

லங்கா பிரிமீயர் லீக்கின் திகதியில் மாற்றம்