உள்நாடு

கிராண்ட்பாஸின் இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் பலி, இருவர் காயம்

கிராண்ட்பாஸின் கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

குறித்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

சில பகுதிகளுக்கு 13 மணித்தியால நீர்வெட்டு

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொதி