உள்நாடு

கிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் சந்தேக நபருக்குப்பிணை !

(UTV | கொழும்பு) – கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில்,  3 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிலா மர்சுக் என்ற நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தில் 08ஆவது சந்தேக நபராக கருதப்படும் அவரை பிணையில் செல்ல அனுமதித்து கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி  சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தின் பொது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்த நபரின் மனைவியையும் மற்றுமொரு சந்தேகநபரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் தொற்றாளர்களுக்கு இன்று முதல் புதிய முறைமை

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது