உள்நாடு

காஸாவில் போர் நிறுத்தம் – இலங்கை பாராட்டு

காஸா போர் நிறுத்தம் தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பிணைக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காஸா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், காஸா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அனுமதிக்கும் வகையில், போர் நிறுத்த ஒப்பந்தம் நிலையானதாக இருக்கும் என்று இலங்கை நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திலும் அப்பிராந்தியத்திலும் மிக விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்புடைய அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம்

IMF ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு

முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!