வகைப்படுத்தப்படாத

காவற்துறை சீருடையுடன் இருவர் கைது.

(UDHAYAM, COLOMBO) – காவற்துறை சீருடை, சிறைச்சாலை அதிகாரிகள் பயன்படுத்தும் இரண்டு தலைக்கவசங்கள் மற்றும் கைவிலங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லேரியா – வெலிவிட்ட பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ள இவர்களிடமிருந்து போலி வாகன இலக்கத்தகடு, காப்புறுதி பத்திரம் மற்றும் வாகன அனுமதி பத்திரமும் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கர வண்டியொன்றை பரிசோதனை செய்து போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் மீட்பு

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி தடை…

தேர்தலுக்கான நடவடிக்கைகள் 95 வீதம் நிறைவு