விளையாட்டு

காலியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது ஜப்னா

(UTV | ஹம்பாந்தோட்டை) –  லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது போட்டி ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் காலி க்ளேடியேடர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி, காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அப்ரிடி 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் குணதிலக 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், ஜப்னா அணி சார்பாக ஒலிவியர் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் வனிந்து ஹசரங்க இரண்டு விக்கெட்டுகளையும் திசர பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அவிஸ்க பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டார்.

சொயிப் மலிக் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் போட்டியின் ஆட்டநாயகனாக அவிஸ்க பெர்ணான்டோ தெரிவானார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை திரும்புகிறார் மாலிங்க!

100 பந்து கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்தில் அறிமுகம்!

கொல்கத்தாவை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி