விளையாட்டு

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு மூன்று மாதங்கள் தடை

(UTVNEWS|COLOMBO ) – கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அண்மையில் நடைபெற்ற இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த மெஸ்ஸி, “இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இலங்கை

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தம் வசமாக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்