சூடான செய்திகள் 1

காலி வீதியை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

 

(UTVNEWS|COLOMBO) -கொழும்பு காலி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை வரலாற்று சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மகா தேவோல் ஆலயத்தின் பெரஹெரா நிகழ்வு காரணமாக இக் காலப்பகுதியின் போது சீனிகம பகுதியில் பயணிக்கும் வாகங்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

காலியிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஒருமருங்கு ஊடாக பயணிக்க முடியும் என்பதோடு, கொழும்பலிருந்து காலி திசை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள், மீட்டியாகொட கஹவ சந்தி ஊடாக திருப்பி மீட்டியாகொட கிரகலகஹவலே சந்தியில் அளுத்வல, சரண சந்தியில் கோனாபீனுவல நாற்சந்தி ஊடாக குமாரகந்த சந்தி மூலம் காலி வீதிக்கு பயணிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியை வழங்க நடவடிக்கை