வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் மேற்கு ,சப்ரகமுவ, மத்தி மற்றும் வட மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் மேலும் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Favreau reveals one real “Lion King” shot

பயிர்ச் செய்கை காணிகளை குடியிருப்புக்களாக மாற்றக்கூடாது

முதல் பெண் ஜனாதிபதியாக சுசானா கபுட்டோவா