வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும்.

சில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Rajasinghe Central and Azhar College win on first innings

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

லொரி கவிழ்ந்து விபத்து – 09 பேர் உயிரிழப்பு