வகைப்படுத்தப்படாத

காலஞ்சென்ற ஊடகவியலாளருக்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

(UDHAYAM, COLOMBO) – காலஞ்சென்ற ஊடகவியலாளர் பிரபாத் வீரரட்னவின் பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இம்புட்டான ,ஜயந்தி மாவத்தையிலுள்ள அவரது இல்லத்துக்கு கடந்த 9ம் திகதி இரவு சென்ற பிரதமருடன் அமைச்சர்களான மங்களசமரவீர , டொக்டர் ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன் சூரிய ஆகியோர் காலஞ்சென்ற ஊடகவியலாளரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் உள்ளிட்டோர் மறைந்த ஊடகவியலாளரின் மனைவி நிசாமினி ஜெயக்கொடியிடம் தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டனர்.

Related posts

Three faculties at Ruhuna Uni. to be reopened tomorrow

Holloway retains UFC Featherweight Title

Gotabhaya returns from Singapore