சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-புத்தளம் முதல் கொழும்பினூடாக பலப்பிட்டிய வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் குறித்த கடற்பிராந்தியங்கள் இடைக்கிடை கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக மன்னாரினூடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் ​வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வகையில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஜனாதிபதி அடம்பிடிப்பது நல்லதல்ல – கிரியெல்ல

போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு நீதிமன்றத்தை நாடும் கல்வியைச்சர்!

பரீட்சை நிலையத்தில் சிக்கிய நபர்